தெலுங்கு திரையுலகில் ‘ஏ மாயா சேசவே’ என்ற திரைப்படம் 2010-ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை இயக்குநர் கெளதம் மேனன் இயக்கியிருந்தார். இதில் கதையின் நாயகனாக நாகசைத்தன்யா நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக சமந்தா டூயட் பாடி ஆடியிருந்தார். இது தான் சமந்தா அறிமுகமான முதல் தெலுங்கு திரைப்படமாம்.
இப்படத்தில் சமந்தா ‘ஜெஸ்ஸி’ என்ற கேரக்டராக வலம் வந்திருந்தார். இதில் இவரது நடிப்பு அனைவரையும் ஈர்த்து விட்டது. இது ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ (தமிழ்) படத்தின் தெலுங்கு வெர்ஷன் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் வெர்ஷனில் சமந்தா கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அதன் பிறகு தமிழ் திரையுலகில் ‘பாணா காத்தாடி’ மூலம் ஹீரோயினாக அவதாரம் எடுத்த சமந்தா ‘மாஸ்கோவின் காவிரி, நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான், கத்தி, தங்க மகன்’ என அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார்.
இப்போது தெலுங்கு மற்றும் தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாஸ் காட்டும் சமந்தாவிற்கு, தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தற்போது, இந்த ஆண்டு வெளியான ‘ஜானு’ (தெலுங்கு) படத்தில் சமந்தா நடித்த காட்சிகளையும், அதன் ஒரிஜினல் வெர்ஷனான ’96’-யில் (தமிழ்) விஜய் சேதுபதியின் சில காட்சிகளையும் சேர்த்து எடிட் செய்து ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. தெலுங்கு வெர்ஷனில் ஹீரோவாக ஷர்வானந்தும், தமிழ் வெர்ஷனில் ஹீரோயினாக த்ரிஷாவும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Begin your day with #ThinkMashup 9⃣6⃣ X Jaanu – @VijaySethuOffl as Ram & @Samanthaprabhu2 as Jaanu – A Re-imagination #96MeetsJaanu https://t.co/JMmQfD8HHN
@govind_vasantha @Chinmayi @Gourayy pic.twitter.com/skuVZ4QiYV
— Think Music (@thinkmusicindia) August 18, 2020