விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தை வெளியிட தடை விதித்த நாடு… என்ன காரணம் தெரியுமா?
April 5, 2022 / 01:01 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘மாஸ்டர்’ கடந்த ஆண்டு (2021) பொங்கல் ஸ்பெஷலாக தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடத்திலும் ரிலீஸானது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.
இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். விஜய்யின் அடுத்த படமான ‘பீஸ்ட்’-ஐ நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைத்துள்ளார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். இதில் விஜய்-க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
மேலும், முக்கிய ரோலில் இயக்குநர் செல்வராகவன் நடித்துள்ளார். சமீபத்தில், ‘அரபிக் குத்து’, ‘ஜாலியோ ஜிம்கானா’ ஆகிய 2 பாடல்கள் மற்றும் ட்ரெய்லரை ரிலீஸ் செய்தனர். இவ்விரண்டு பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது.
படத்தை வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், ‘பீஸ்ட்’டில் பல வன்முறை காட்சிகள் மற்றும் தீவிரவாதிகள் தொடர்பான காட்சிகள் இருப்பதால் இப்படத்தை குவைத் நாட்டில் வெளியிட அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.