ரஜினியின் ‘பாட்ஷா’ பட மாணிக்கம் ஸ்டைலில் ஆட்டோக்காரராக மாறிய STR… அதுக்கு காரணம் என்ன தெரியுமா?
April 12, 2022 / 07:32 PM IST
|Follow Us
சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் சிலம்பரசன் TR. பிரபல ஹீரோவும், இயக்குநருமான டி.ராஜேந்தரின் மகனான சிலம்பரசன் ஆரம்பத்தில் ‘உறவைக் காத்த கிளி, மைதிலி என்னை காதலி, ஒரு தாயின் சபதம், எங்க வீட்டு வேலன்’ போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.
சிலம்பரசன் கதையின் நாயகனாக அவதாரம் எடுத்த படம் ‘காதல் அழிவதில்லை’. இந்த படம் சூப்பர் ஹிட்டானதும் சிலம்பரசனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. இப்போது சிலம்பரசன் நடிப்பில் ‘மஹா, பத்து தல, வெந்து தணிந்தது காடு’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
சமீபத்தில், ‘ஆஹா’ OTT தளத்திற்கான பிராண்ட் அம்பாசிடரானார் நடிகர் சிலம்பரசன். தற்போது, ‘ஆஹா’விற்காக சிலம்பரசனை வைத்து ஒரு புதிய ப்ரோமோவை ஷூட் செய்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதில் சிலம்பரசன் ரஜினியின் ‘பாட்ஷா’ பட மாணிக்கம் ஸ்டைலில் ஆட்டோக்காரராக வலம் வருகிறாராம். இதன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.