குலதெய்வ கோவிலுக்கு விக்னேஷ் சிவனுடன் சென்ற நயன்தாரா… வைரலாகும் வீடியோஸ்!
May 23, 2022 / 08:46 PM IST
|Follow Us
தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள். ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல், கனெக்ட், O2’, மலையாளத்தில் ‘கோல்டு’, தெலுங்கில் ‘காட்ஃபாதர்’, ஹிந்தியில் நடிகர் ஷாருக்கான் படம் என ஆறு படங்கள் லைன் அப்பில் இருந்தது.
இதில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம் கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை நயன்தாராவின் காதலரும், பிரபல இயக்குநருமான விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார். இதில் நயன்தாராவுடன் இணைந்து ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும், சமந்தாவும் நடித்திருந்தனர்.’
சமீபத்தில், நயன்தாரா – விக்னேஷ் சிவனுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் வருகிற ஜூன் 9-ஆம் தேதி நடைபெறவிருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது, விக்னேஷ் சிவன் நயன்தாராவுடன் அவரது குலதெய்வ கோவிலுக்கு சென்று வந்ததாக தகவல் கிடைத்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் மற்றும் வீடியோஸ் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.