தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார்களை இயக்குவது தொடங்கி பாலிவுட்டில் அமீர் கான் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோருடன் இணைந்து பிளாக்பஸ்டர் படங்கள் கொடுத்தது வரை, இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் எனும் பெயர் இந்திய அளவில் பெரும் புகழ் பெற்றது.
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்குநராக மட்டுமன்றி அவரது நிறுவனத்தின் மூலம், சில திரைப்பட இயக்குனர்களுக்கு ஒரு பிரகாசமான அறிமுகத்தை உருவாக்கி, இளம் திறமையாளர்களை ஊக்கப்படுத்தினார். அவர் பல ஆண்டுகளாக மறக்க முடியாத பல திரைப்படங்களை கொடுத்துள்ளார்,
பல்வேறு காலங்களில் உள்ளடக்கம் மற்றும் தனித்துவமான கதைகளை உருவாக்கும் ஆர்வத்துடன் இயங்கும், கஜினி இயக்குனர் இப்போது பற்புல் ” பற்புல் புள் என்டேர்டைன்மெண்ட் ” நிறுவனத்துடன் இணைந்து அற்புதமான திரைப்படங்களைத் தயாரிக்கவிருக்கிறார். இவர்களின் முதல் முயற்சியாக, மற்றொரு அற்புதமான புதிய திறமையாளரான N.S.பொன்குமார் இயக்கத்தில் “1947 ஆகஸ்ட் 16” என்ற தலைப்பில் அதிரடியான வராலாற்று படத்தை உருவாக்குகின்றனர். இயக்குநர் முருகதாஸிடம் நீண்ட காலமாக இணை இயக்குநராக இருந்தவர் N.S.பொன்குமார் என்பது குறிப்பிடதக்கது.
அறிமுக நாயகி ரேவதியுடன் கௌதம் கார்த்திக் நடித்துள்ள இப்படம், இந்திய சுதந்திரத்தின் உச்சக்கட்டத்தின் போது, ஒரு கிராமத்தில் ஒரு துணிச்சலான வீரன் பிரிட்டிஷ் படைகளுடன் போரிடும் கதையைச் சொல்கிறது. தமிழ்நாட்டின் அழகிய பகுதிகளில் படமாக்கப்படும் இந்த படம் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது, தற்போது இப்படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தின் முதல் பார்வையை நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைதளங்களில் வெளியீட்டுள்ளார் .