நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். கோலிவுட் தொடங்கி ஹாலிவுட் வரை சென்று தமிழ் நடிகனாக அசத்தி இருக்கிறார். சமிபத்தில் இவர் நடித்த ஹாலிவுட் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . நடிகர் தனுஷ் தற்பொழுது வாத்தி படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து கேப்டன் மில்லர் படத்தில் நடிக்க இருக்கிறார் .
நடிகர் தனுஷ் தற்பொழுது நடித்து முடித்துள்ள படம் நானே வருவேன் . இந்த படத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்கி உள்ளார் . கதை மற்றும் திரைக்கதையை நடிகர் தனுஷ் எழுதி உள்ளார். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார் . நடிகர் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்து இருக்கிறார் .கலைப்புலி.எஸ்.தாணு இந்த படத்தை தயாரிக்கிறார் .
தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் நாயகியாக இந்துஜா நடிக்கிறார். இப்படத்தில் எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்நிலையில், நானே வருவேன் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளதாக இயக்குனர் செல்வராகவன் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அதனுடன் ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.