இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த இந்த வருடத்தின் பிரமாண்டமான வெற்றியை பெற்ற படம் தான் விக்ரம் .இந்த படத்தில் நடிகர்கள் பஹத் பாசில், விஜய் சேதுபதி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‛விக்ரம்’ படம் அதிரடி ஆக்சன் கதையில் தயாராகி உள்ளது. மேலும் நடிகர் சூர்யா இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து அசத்தி இருந்தார் . உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வந்த இந்த படம் வருகின்ற ஜூலை 8-ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கிறது .
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். விக்ரம் படத்திலிருந்து முதன் முதலில் வெளியான பாடல் பத்தல பத்தல . இந்த பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதி அவரே பாடி இருந்தார் . சாண்டி மாஸ்டர் இந்த பாடலுக்கு நடனம் அமைத்து இருந்தார் . இந்த பாடலின் லிரிக் வீடியோ மிகவும் வைரலானது .
ஆனாலும் இந்த பாடலில் சில வரிகள் ஒன்றிய அரசை விமர்சிப்பது போல் அமைந்து இருக்கிறது . இதனால் பத்தல பத்தல பாடலுக்கு எதிர்ப்பு எழுந்தது . இதனால் நடிகர் மற்றும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரான கமல் மீது சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று செய்தி வெளியாகி இருந்தது . அந்த புகார் மனுவில், கமல்ஹாசன் நடித்துள்ள ‘விக்ரம்’ திரைப்படத்தில் வரும் ‘பத்தல பத்தல’ என்ற பாடலில் மத்திய அரசை விமர்சிக்கும் விதமாக உள்ளது எனவே அந்த வரிகளை நீக்க வலியுறுத்தி சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது .
இந்நிலையில் படம் திரையரங்கில் வெளியான பொழுது சர்ச்சையான வரிகள் படத்தில் இடம்பெறவில்லை.இதனிடையே பத்தல பத்தல பாடலின் வீடியோ நாளை வெளியாக இருக்கிறது என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது .