சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சரவணன் அவரது கடைகளுக்கான விளம்பர படங்களில் நடித்து பிரபலமானார் . அதன் பிறகு இவர் அவரது தயாரிப்பில் ”தி லெஜண்ட்” என்கிற படத்தை தயாரித்து வருகிறார் . அந்த படத்தில் இவரே கதாநாயகனாகவும் நடித்து வருகிறார் . இந்த படத்தை நடிகர் அஜித் மற்றும் விக்ரமை உல்லாசம் என்கிற படத்தில் இணைந்து நடிக்க வைத்து இயக்கிய ஜே.டி மற்றும் ஜெரி என்கிற இரட்டை இயக்குனர்கள் இயக்குகின்றனர். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார் . இந்த படத்தின் மோஷன் போஸ்டர் முன்னதாக வெளியாகி இருந்தது . மேலும் படத்தின் முதல் பாடல் மோசலு மொசுலு என்கிற பாடல் வெளியாகி இருந்தது .அந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு இருந்தது .
இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்டேலா, பிரபு, யோகி பாபு, நாசர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ‘வாடிவாசல்’ பாடல் என்கிற பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளியாகியது . மேலும் சில தினங்களுக்கு முன் இந்த படத்தின் ட்ரைலர் வெளியானது . சரவணன் அருள் சண்டைக்காட்சிகளில் அனைவரையும் மிரட்டி உள்ளார் . ஷங்கர் படத்திற்கு இணையாக பிரமாண்டமாய் இந்த படம் காணப்படுகிறது . மேலும் இந்த படத்திற்கு நடந்த இசை வெளியீட்டு விழாவில் தமன்னா , ஹன்சிகா என பல தென்னிந்திய சினிமா நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டார்கள் .
இந்நிலையில் லெஜெண்ட் படத்தின் டிரைலர் நடிகர் ரஜினியின் அண்ணாத்த மற்றும் நடிகர் அஜித்தின் வலிமை படத்தின் டிரைலரை காட்டிலும் அதிக வியூஸ்களை வலையொளியில் பெற்றுள்ளது . இந்த படத்தின் டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து இருந்தது . இந்நிலையில் லெஜெண்ட் படத்தை ஜூலை 28-ஆம் தேதி திரையரங்கில் வெளியிடலாம் என்று படக்குழு முடிவு எடுத்துள்ளது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது .
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.