’16YearsOfImsaiArasan23rdPulikesi’… வடிவேலு ஹீரோவாக நடித்திருந்த இப்படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?
July 15, 2022 / 01:18 AM IST
|Follow Us
‘காமெடி’ என்று சொன்னாலே வடிவேலுவின் பெயர் தான் டக்கென நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவரின் காமெடி காட்சிகள் நம் மனதில் பதிந்து விட்டது. நமது வாழ்க்கையிலும், படங்களில் வடிவேலு பேசிய பல வசனங்களை சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தினமும் நம்மை அறியாமல் பேசிக் கொண்டே தான் இருக்கிறோம்.
இப்போது வடிவேலு நடிப்பில் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், சந்திரமுகி 2, மாமன்னன்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் வடிவேலு ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தை இயக்குநர் சுராஜ் இயக்கி வருகிறார்.
வடிவேலுவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சிம்புதேவன் இயக்கியிருந்தார்.
இதில் மிக முக்கிய ரோல்களில் மோனிகா, தேஜாஸ்ரீ, மனோரமா, நாசர், இளவரசு, ஸ்ரீமன், நாகேஷ், மனோபாலா மற்றும் பலர் நடித்திருந்தனர். கடந்த ஜூலை 8-ஆம் தேதியுடன் இந்த படம் வெளி வந்து 16 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனால் வடிவேலுவின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ‘#16YearsOfImsaiArasan23rdPulikesi’ என்ற ஹேஸ் டேக்கை ட்ரெண்ட் செய்தார்கள். தற்போது, இந்த படம் உலக அளவில் ரூ.24.15 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாக தகவல் கிடைத்துள்ளது.