ரசிகர்களை கவரும் பொன்னியின் செல்வன் பட்டுப்புடவைகள் !
September 16, 2022 / 09:57 PM IST
|Follow Us
இந்திய சினிமாவின் முக்கியமான தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் செக்க சிவந்த வானம் . இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம்
பொன்னியின் செல்வன் படத்தை இயக்க போவதாக அறிவித்தார் . கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற நாவலை தழுவி இந்த படம் உருவாகியுள்ளது .
இந்த படத்தில் விக்ரம் ,கார்த்தி ,ஜெயம் ரவி , ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா என பல சினிமா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் . இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளது . இந்த படத்திற்கு A.R.ரகுமான் இசையமைத்து உள்ளார் . தமிழ் ரசிகர்கள் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது .
இந்நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் படக்குழு படத்தின் விளம்பர படுத்தும் பணிகளை துவங்கி உள்ளது அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் விக்ரம் ,கார்த்தி ,த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் சரத்குமார் , பார்த்திபன் ஆகியோரின் ஸ்டில்ஸை வெளியீட்டு இருந்தனர் .அதனை தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு , பிரபு , பிரகாஷ் ராஜ் , லால் , ஆகியோரின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தி புகைப்படத்தை வெளியிட்டு இருந்தனர் . படத்தின் ட்ரைலர் வந்த பிறகு பொன்னியின் செல்வன் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது .
மேலும் கார்த்தி .விக்ரம் , ஜெயம் ரவி , த்ரிஷா ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் புரோமோஷன் செய்து வருகின்றனர் .இந்நிலையில் பெண்களை கவரும் விதமாக தற்போது “பொன்னியின் செல்வன்” படத்தில் நடித்துள்ள நடிகர்களின் உருவம் பொறிக்கப்பட்ட பட்டு சேலைகள் சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளது.
“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் கதாபாத்திரங்களின் உருவங்கள் மற்றும் போர் வாள்கள் சேலை முழுவதும் நிறைந்து வண்ண மயமாக காட்சியளிக்கிறது.இந்த சேலைகளை வாங்க ரசிகர்கள் மிகவும் மும்முராக உள்ளனர் .