பிரபல நடிகருடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறாரா சூர்யா பட நடிகை?… தீயாய் பரவும் தகவல்!
September 18, 2022 / 11:31 AM IST
|Follow Us
தமிழில் ‘மாயா, ஆஹா, தெய்வ மகள், லட்சுமி வந்தாச்சு’ போன்ற டிவி சீரியல்களில் நடித்ததன் மூலம் அதிக கவனம் ஈர்த்த நடிகை வாணி போஜன். இவர் 2020-ஆம் ஆண்டு ரிலீஸான ‘ஓ மை கடவுளே, லாக்கப்’, கடந்த ஆண்டு (2021) ரிலீஸான ‘மலேஷியா டு அம்னீஷியா, இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ ஆகிய நான்கு தமிழ் படங்களில் நடித்திருந்தார்.
இதில் ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ படத்தை டாப் ஹீரோக்களில் ஒருவரான சூர்யா தயாரித்திருந்தார். வாணி போஜன் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.
இப்போது வாணி போஜன் நடிப்பில் ‘தாழ் திறவா, பாயும் ஒளி நீ எனக்கு, கேசினோ, பகைவனுக்கு அருள்வாய், லவ், ஊர் குருவி, ரேக்ளா, ஆர்யன்’ என எட்டு தமிழ் படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இந்நிலையில், நடிகை வாணி போஜன் பிரபல நடிகர் ஜெய்யை காதலித்து வருவதாகவும், அவருடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் கோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது. வாணி போஜனுக்கு இயக்குநர்கள் யாராவது கதை சொல்ல சென்றால் கூட, அவருடன் ஜெய்யும் சேர்ந்து தான் கேட்கிறாராம். ஜெய்யும், வாணி போஜனும் இணைந்து ‘ட்ரிபிள்ஸ்’ என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.