ஃபிலிம்ஃபேர் விருது விழாவில் விருதுகளை குவித்த சூரைப்போற்று படம் !
October 10, 2022 / 11:09 PM IST
|Follow Us
ஃபிலிம்ஃபேர் விருதுகள் என்பது திரைப்படத் துறையில் கலை மற்றும் தொழில்நுட்ப சிறப்பை கௌரவிக்கும் வருடாந்திர விருது ஆகும். ஃபிலிம்பேர் விழா இந்தியாவின் மிகவும் பிரபலமான திரைப்பட நிகழ்வுகளில் ஒன்றாகும். விருதுகள் முதன் முதலில் தி டைம்ஸ் குழுமத்தின் ஃபிலிம்ஃபேர் இதழால் 1954 ஆம் ஆண்டில் தேசிய திரைப்பட விருதுகளின் அதே ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ஆசிரியரான கிளேர் மென்டோன்காவிற்குப் பிறகு அவை ஆரம்பத்தில் “கிளேர் விருதுகள்” அல்லது “தி கிளேர்ஸ்” என்று குறிப்பிடப்பட்டு வந்தது .
1956 ஆம் ஆண்டு இரட்டை வாக்குப்பதிவு முறை உருவாக்கப்பட்டது. இந்த முறையின் கீழ், இந்திய அரசால் நியமிக்கப்பட்ட குழுவால் தீர்மானிக்கப்படும் தேசிய திரைப்பட விருதுகளுக்கு மாறாக, பிலிம்பேர் விருதுகள் பொதுமக்களாலும் நிபுணர்கள் குழுவாலும் வாக்களிக்கப்படுகின்றன. இந்த விழா கடந்த காலங்களில் மற்றும் தற்போதைய ஏற்பாடுகளில் பல்வேறு தனியார் நிறுவனங்களால் நிதியுதவி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2020 மாற்றம் 2021 -ஆம் ஆண்டிற்கான . ஃபிலிம்பேர் விருது வழங்கும் விழா பெங்களூரில் நடந்தது . நடிகர் சூர்யா ,அல்லு அர்ஜுன் உள்ளிட்ட பல தென்னிந்திய நடிகர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டனர் . இதில் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர் , நடிகை உள்ளிட்ட பல பிரிவுகளில் விருது கிடைத்துள்ளது . அந்த விருதுகளின் பட்டியல் இதோ
2020 சிறந்த நடிகர் -சூர்யா
சிறந்த இயக்குனர் – சுதா கொங்கரா
சிறந்த துணை நடிகை ஊர்வசி
சிறந்த இசை ஆல்பம் – ஜி.வி.பிரகாஷ்
சிறந்த இசை பாடகர் – கிறிஸ்ட்டின் ஜோஸ் , கோவிந்த் வசந்தா
(பாடல் -ஆகாசம் ;படம் சூரரைப்போற்று )
சிறந்த ஒளிப்பதிவு – நிகேத் பொம்மி
சிறந்த பின்னணி பாடகி – தீ
(பாடல் – காட்டுப்பயலே ;படம் சூரரைப்போற்று )
2021 சிறந்த துணை நடிகர் பசுபதி
சிறந்த பாடலாசிரியர் – அறிவு
(பாடல் – நீயே ஒளி ;படம் சார்பட்டா பரம்பரை )
சிறந்த நடனம் – தினேஷ்
(பாடல் – வாத்தி கம்மிங் ; படம் – மாஸ்டர் )
சிறந்த படம் – ஜெய்பீம்
சிறந்த நடிகை – லிஜோமோள் ஜோஸ்
சிறந்த நடிகர் (Critics choice ) – ஆர்யா , அரவிந்த் சாமி