‘MYOSITIS’ நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா… ட்ரிப்ஸ் ஏற்றிக்கொண்டே ‘யசோதா’வுக்கு டப்பிங் பேசும் ஸ்டில் வைரல்!
October 29, 2022 / 08:14 PM IST
|Follow Us
சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘யசோதா’. இந்த படத்தை இயக்குநர்கள் ஹரி – ஹரிஷ் இயக்கி வருகிறார்கள்.
இதில் மிக முக்கிய ரோல்களில் வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபடா, பிரியங்கா ஷர்மா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்துக்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான மணிசர்மா இசையமைத்து வருகிறார். இதனை ‘ஸ்ரீதேவி மூவிஸ்’ என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் தயாராகி வரும் இப்படத்தின் ட்ரெய்லரை சமீபத்தில் ரிலீஸ் செய்தனர்.
இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. படத்தை வருகிற நவம்பர் 11-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்துக்கு ட்ரிப்ஸ் ஏற்றிக்கொண்டே டப்பிங் பேசும் ஒரு ஸ்டில்லை ஷேரிட்டதுடன் “சில மாதங்களுக்கு முன்பு Myositis என்ற ஆட்டோ இம்யூன் பாதிப்பு எனக்கு இருப்பது கண்டறியப்பட்டது.
இதற்கான சிகிச்சை எடுத்து குணமான பிறகு தெரிவிக்கலாம் என்றிருந்தேன். ஆனால், இந்த பாதிப்பு குணமாக நான் எதிர்பார்த்ததை விட அதிக நாட்கள் எடுத்து கொள்கிறது. நான் சீக்கரமே குணமடைந்து விடுவேன் என மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.