சன் மியூசிக் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘டிக் டிக் டிக் ” நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தொகுப்பாளினி சஸ்டிகா ராஜேந்திரன் . சன் மியூசிக் தொலைக்காட்சியில் கடைசியாக வெற்றி பெற்ற நிகழ்ச்சி ‘டிக் டிக் டிக் ” நிகழ்ச்சி என்று சொல்லலாம் . அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சியின் வெற்றி இருந்தது. அந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு இவரின் பங்கு மிக அதிகம் . இவரின் நகைச்சுவையான பேச்சுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் ஆனார்கள் . கொரோனா காலத்தில் அந்த நிகழ்ச்சிக்கு குட் பை சொன்ன சஸ்டிகா ராஜேந்திரன் பாரிஸ் ஜெயராஜ் படம் மூலம் நாயகியாக கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார் .
ஒரு பக்கம் சினிமாவில் நடித்து வந்தாலும் கலர்ஸ் டிவி , ஜீ தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார் . இந்நிலையில் சஸ்டிகா ராஜேந்திரன் தனது அடுத்த அவதாரத்தை எடுத்துள்ளார் . பிரபல விளையாட்டு தொலைக்காட்சியான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ப்ரோ கபாடி போட்டி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார் .
இதை தனது இன்ஸ்டா பக்கத்தில் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார் . இதை பார்த்த அவரது ரசிகர்களும் நண்பர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் .