VAU MEDIA ENTERTAINMENT மற்றும் WHITE HORSE STUDIOS சார்பில் D.வீரா சக்தி & K. சசிகுமார் வழங்கும், சன்னி லியோன், சதீஷ் நடிப்பில், இயக்குனர் யுவன் இயக்கத்தில், வரலாற்று பின்னணியில் உருவாகும் ஹாரர் காமெடி திரைப்படம் “ஓ மை கோஸ்ட்” (OMG). விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா திரை பிரபலங்கள் கலந்துகொள்ள பிரமாண்டமாக அரங்கேறியது.
விழாவில் பல சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்று இருந்தனர் . அந்த வகையில் நடிகர் சதிஷ் இந்த விழாவில் பேசியது தற்போது சர்ச்சையாகி உள்ளது . நடிகர் சதீஸ் , சன்னி லியோன் கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு உடை அணிந்து இருக்கிறார் ஆனால் தர்ஷா குப்தா கோயம்புத்தூர் பெண் அவர் எவ்வாறு உடை அணிந்து இருக்கிறார் என்று தர்ஷா அவர்களை உடையை கிண்டல் அடித்தார் இது தர்ஷாவை முகம் சுழிக்க வைத்து .
இந்நிலையில் தற்போது இதைப்பற்றி பேசி உள்ள பிரபல இயக்குனர் நவீன் ” சன்னிலியோன் திரையில் ஆடையின்றி தோன்றுவதும், கோயமுத்தூர் பெண் மேடையில் என்ன ஆடை அணிய வேண்டும் என்பதும் அந்த பெண்களின் தனிப்பட்ட உரிமை. உங்கள் மனைவி என்ன ஆடை அணிய வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்தாலே அது தவறுதான் என்று ட்வீட் செய்துள்ளார் .