ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் அவதார் . இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது அவதார் 2 என்கிற பெயரில் வரும் டிசம்பர் 16ம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது . இந்தப் படத்திற்கு இந்தியாவில் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த படத்திற்காக தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்கிற சர்ச்சை எழுந்துள்ளது . ஆனால் கேரளாவில் இந்த படத்தை திரையிடப்போவதில்லை என போர்க்கொடி தூக்கியுள்ளது திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் .
இதற்கு காரணம் இந்த படத்தின் கேரள விநியோகஸ்தர்கள் முதல் வாரம் வசூலாகும் தொகையில் வழக்கமாக தங்களுக்கு தரப்படும் பங்கு தொகையை விட 5 சதவீதம் அதிகமாக தர வேண்டும் என நிபந்தனை மிதித்து உள்ளார்களாம். ஆ
னால் எப்போதும் போல 55 சதவீதம் மட்டுமே தர முடியும் என தியேட்டர் நிர்வாகத்தினர் உறுதியாக கூறிவிட்டனர் .
ஆனால் விநியோகஸ்தர்கள் விடாப்பிடியாக அதிக தொகை கேட்பதால், அவதார்-2 படத்தை வெளியிடுவதில்லை என முடிவு செய்துள்ளார்களாம் திரையரங்க உரிமையாளர்கள். இது ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது . தற்போது இருதரப்பினருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் விநியோகஸ்தர்கள் ஒரு படி இறங்கி வந்து எப்போது வாங்கும் வழக்கமான பங்கு தொகையை பெற சம்மதித்து உள்ளனர் . இதனால் தற்போது அவதார் 2 படம் கேரளாவில் வெளியாவதற்கு எந்த தடையும் இல்லை
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus