அஞ்சலி தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முக்கியமான நடிகையாக உள்ளார் . அவரது முதல் படம் தெலுங்கில் வெளியான த்ரில்லர் படமான போட்டோ (2006), தமிழில் ஜீவாவுடன் கற்றது தமிழ் (2007) திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் . 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில், அவர் அங்காடி தெரு மற்றும் எங்கேயும் எப்போதும் திரைப்படங்களில் நடித்ததற்காக சிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம்பேர் விருதையும், அங்காடி தெருவுக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதையும் வென்றார், பின்னர் “சிறந்த இளம் நடிகர்களில்” ஒருவராக அங்கீகரிக்கப்பட்டார்.
2013 இல், அவர் தெலுங்கு சினிமாவுக்குத் திரும்பினார் மற்றும் சீதம்மா வக்கிட்லோ சிரிமல்லே செட்டு, பலுபு, மசாலா, கீதாஞ்சலி மற்றும் டிக்டேட்டர் போன்ற வெற்றிகரமான படங்களில் நடித்தார். சீதம்மா வக்கிட்லோ சிரிமல்லே செட்டு மற்றும் கீதாஞ்சலி ஆகிய படங்களில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான இரண்டு நந்தி விருதுகளையும் பெற்றார்.
தற்போது அஞ்சலி நடிப்பில் ஃபால் என்கிற இணைய தொடரில் நடித்துள்ளார் . இதை விளம்பர படுத்த சில நேர்காணல்களை கொடுத்து வந்தார் . அப்போது அஞ்சலிக்கு திருமணம் முடிவாகி விட்டதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் புதிய தகவல் பரவி வருகிறது. இதற்கு அஞ்சலி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, ”நான் இப்போது திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இல்லை. திருமணத்தை பற்றி யோசிக்கவே இல்லை. ஆனாலும் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன். திருமணம் முடிவானதும் மறைக்காமல் எல்லோருக்கும் தெரியப்படுத்துவேன்” என்றார்.