பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளரான தில் ராஜு, விஜய் நடித்த ‘வாரிசு’ படத்தின் மூலம் கோலிவுட்டில் படம் தயாரித்துள்ளார் . மேலும் அவர் சமீபத்தில் விஜய்யை தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகர் எனக் கூறிய அவர், அதனால் ட்ரோல்களை எதிர்கொண்டார். ஒரு ஹீரோவின் நட்சத்திர மதிப்பு திரையரங்கு வருவாயைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது என்று தில் ராஜு சமீபத்தில் ஒரு ஊடக உரையாடலில் பேசி இருந்தார் .
இவர் இவ்வாறு பேசியதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர் . சினிமா பிரபலங்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர் . இன்னும் சிலர் இதை வாரிசு படத்தின் ப்ரோமோஷனுக்காக தில் ராஜு கூறினார் என்று கருத்து தெரிவித்தனர் .
இந்நிலையில் வாரிசு படத்துடன் மோத உள்ள நடிகர் அஜித்தின் துணிவு படத்தின் ப்ரோமோஷன் தற்போது சிறப்பாக நடந்து வருகிறது . அந்த வகையில் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் ஒரு பேட்டி கொடுக்கையில் அவரிடம் விஜய் நம்பர் 1 ஸ்டார் என்று தில் ராஜு கூறியது பற்றி உங்களது கருத்து என்ன என்ற கேள்வி எழுப்பப்பட்டது . இதற்கு பதில் அளித்த போனி கபூர் அது அவர் மனநிலை , என்னை பொறுத்த வரை கன்டென்ட் தான் நம்பர் 1 இல்லையென்றால் பொன்னியின் செல்வன் , லவ் டுடே , இவ்வளவு ஹிட் ஆகி இருக்காது .
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.