தென்னிந்திய சினிமாக்களில் குறிப்பாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை . முன்னணி நடிகர் இயக்குநர்களை தங்கள் இஷ்டத்துக்கு பணி செய்ய விடாமல் குறுக்கீடு செய்வதால் தான் பெரிய நடிகர்களின் படங்கள் தோல்வி அடைகின்றன என்று கூறப்படுகிறது . இந்நிலையில் கடந்த ஆண்டு மூன்று சின்ன படங்கள் பெரிய அளவில் ஹிட் அடித்தது. அந்த மூன்று படத்தில் தமிழில் ஒரு படமும் , மலையாளத்தில் ஒரு படமும் , கன்னட மொழியில் ஒரு படமும் ஆகும் . மூன்று படத்திற்கு ஒரு ஒற்றுமை உள்ளது மூன்று படத்தையும் இயக்கிய இயக்குனர்களே படத்தில் முதன்மை மற்றும் முக்கிய பாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தனர் .
அந்த வகையில் முதல் படம்
1.லவ் டுடே:
2022 -ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4ம் தேதி வெளியான படம் லவ் டுடே . இந்த படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . மேலும் வசூல் ரீதியாகவும் நல்ல வசூலை பெற்றது. கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்த லவ் டுடே படம் இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களின் காதல் எப்படி இருக்கிறது என்பதை தெள்ளத் தெளிவாக காண்பிக்கப்பட்டிருந்தது. முதலில் தமிழில் வெளியான இந்த படம் அதன் பிறகு தெலுங்கு மொழியில் டப் செய்யப்பட்டு அங்கயும் ஹிட் அடித்தது .
2. ஜெய ஜெய ஜெய ஜெய ஹே:
மலையாளத்தில் சியர்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் சார்பில் லட்சுமி வாரியர் மற்றும் கணேஷ் மேனன் தயாரிப்பில், விபின் தாஸ் இயக்கத்தில், பாசில் ஜோசப் மற்றும் தர்ஷனா ராஜேந்திரன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ஜெய ஜெய ஜெய ஜெய ஹே. இதில் இயக்குனர் விபின் தாஸ் சிறிய வேடத்தில் தோன்றியிருப்பார். ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் 5 கோடியில் உருவாக்கப்பட்ட இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் 42 கோடியை அசால்ட்டாக குவித்து சாதனை படைத்தது.
3. காந்தாரா:
கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி கன்னட மொழியில் வெளியாகி காந்தாரா திரைப்படம் தமிழகத்திலும் ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்றது . நடிகர் ரிஷப் ஷெட்டி இப்படத்தை இயக்கி நடித்திருந்தார். பழங்குடியினர் பிரச்சினையை ஆன்மீகத்துடன் ஒப்பிடம் வகையில் இந்த படம் இருந்தது . 16 கோடி பட்ஜெட் கொண்ட இப்படம் 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது .