ராம் போதினேனிக்கு பதிலாக நடித்த பரத்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?
January 19, 2023 / 04:44 PM IST
|Follow Us
சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் பரத். இவருக்கு தமிழில் அமைந்த முதல் படத்துக்கே ஷங்கர் தான் இயக்குநர். அது தான் ‘பாய்ஸ்’. இந்த படத்துக்கு பிறகு நடிகர் பரத்திற்கு அடித்தது ஜாக்பாட்.
அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘செல்லமே, காதல், பட்டியல், அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, எம் மகன், வெயில், கூடல் நகர், பழனி, நேபாளி, சேவல், கண்டேன் காதலை, வானம், ஐந்து ஐந்து ஐந்து, கடுகு, ஸ்பைடர், காளிதாஸ், மிரள்’ என தமிழ் படங்கள் குவிந்தது.
இதில் ‘காதல்’ படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பாலாஜி சக்திவேல் இயக்கியிருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டானது. முதலில் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க வைக்க வேண்டும் என இயக்குநர் பாலாஜி சக்திவேல் பிரபல தெலுங்கு நடிகர் ராம் போதினேனியை அணுகியிருந்தாராம். பின், சில காரணங்களால் ராம் போதினேனியால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus