பிரபல கிரிக்கெட் வீரர் கே.எல் .ராகுல் சமீபத்தில் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டியை திருமணம் செய்துகொண்டார் . இந்த திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது . இந்நிலையில் பல பிரபலங்கள் இந்த தம்பதிக்கு விலை உயர்ந்த பொருட்களை பரிசாக வழங்கி உள்ளனர் .
கே எல் ராகுலுக்கு திருமண பரிசாக 2.17 கோடி ரூபாய் மதிப்பிலான ‘பிஎம்டபிள்யூ’ காரை விராட் கோலி பரிசாக அளித்துள்ளார். புதுமணத் தம்பதிகளுக்கு அன்பின் அடையாளமாக கே.எல்.ராகுலுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ‘கவாஸாகி நிஞ்சா’ பைக்கை பரிசாக அனுப்பியுள்ளார். ராகுலும் அவரது மனைவியும் தங்கள் நண்பரிடம் இருந்து பெற்ற ‘ஆடம்பரமான’ திருமண பரிசுகள் குறித்த கருத்துகளுடன் ரசிகர்கள் சமூக ஊடகத்தில் பரபரப்பாக பேசி வருகின்றனர்.
அதியாவின் தந்தை சுனில் ஷெட்டி, இவர்களுக்கு மும்பையில் ஒரு ஆடம்பரமான குடியிருப்பை பரிசளித்துள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வீட்டின் விலை சுமார் 50 கோடி ரூபாய் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுனில் ஷெட்டியின் நெருங்கிய நண்பர் சல்மான் கான் தம்பதிக்கு ஆடம்பரமான ‘ஆடி’ காரை பரிசளித்ததாக கூறப்படுகிறது . மேலும் நடிகர் ஜாக்கி ஷெராப், ராகுலுக்கும் அதியாவுக்கும் திருமண பரிசாக விலை உயர்ந்த கடிகாரத்தை பரிசாக அளித்ததாக கூறப்படுகிறது.