நடிகை மீனா தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் 90 காலகட்டத்தில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.இவருக்கு 2009 ஆம் ஆண்டு திருமணமான நிலையில், சினிமாவை விட்டு விலகி இருந்தார். பின்னர் இவரது மகள் நைனிகா விஜயின் தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமானார் .
இதன் பிறகு மீனாவும் சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார். அதில் முக்கியமான படம் தான் மலையாளத்தில் நடிகர் மோகன்லால் நடித்த திரிஷ்யம் திரைப்படம். இப்படம் உலகமெங்கும் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், மீனாவுக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. இந்நிலையில் நடிகை மீனாவின் கணவர் கடந்தாண்டு நுரையீரல் பாதிப்பால் சென்னையில் காலமானார்.

இந்த செய்தி தென்னிந்திய சினிமா பிரபலங்கள் , ரசிகர்கள் என அனைவரும் சோகத்தில் ஆழத்தியது . மீனாவுக்கு நெருங்கிய தோழியாக கலா மாஸ்டர் உள்ளார் . மீனாவின் வீட்டிற்கு சென்று தனது நெருங்கிய நண்பர்களுடன் மீனா இருந்த புகைப்படமும் வெளியானது. இவை அனைத்துமே கலா மாஸ்டர் மீனாவை துயரத்திலிருந்த்து மீட்டெடுக்க செய்த முயற்சியாகும்.
இந்நிலையில் மீனாவை துயரிலிருந்து நீக்க மொத்த திரையலகையும் அழைத்து மீனா 40 என்ற விழாவை நடத்த கலா மாஸ்டர் திட்டமிட்டுள்ளார்.
மீனாவின் 40 ஆண்டுகால வெற்றிகரமான சினிமா வாழ்க்கையை கொண்டாடும் வகையில், மீனா 40 விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்டோரின் தலைமையில் நடத்த கலா மாஸ்டர் யோசித்துள்ளாராம். தனது தோழியை கவலையிலிருந்து மீட்டெடுக்க கலா மாஸ்டர் செய்யப்போகும் இந்த செயலுக்கு மொத்த திரையுலகமும் அவரால் பாராட்டி வருவதோடு கட்டாயம் உறுதுணையாக இருக்கப்போவதாக தெரிவித்துள்
