தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வந்தவர் டி.பி.கஜேந்திரன். இவர் இயக்கிய முதல் படம் ‘வீடு மனைவி மக்கள்’. 1988-ஆம் வெளியான இந்த படத்தில் விசு, கே.ஆர்.விஜயா, பாண்டியன், சீதா ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்த படத்துக்கு பிறகு ‘எங்க ஊரு காவக்காரன், பாண்டி நாட்டு தங்கம், எங்க ஊரு மாப்பிள்ளை, பாட்டு வாத்தியார், பட்ஜெட் பத்மநாபன், மிடில் கிளாஸ் மாதவன், பந்தா பரமசிவம், சீனா தானா 001, மகனே என் மருமகனே’ ஆகிய படங்களை டி.பி.கஜேந்திரன் இயக்கினார்.
இவர் நடிகராக ‘பாரதி, சொக்கத்தங்கம், பிதாமகன், பேரழகன், மகா நடிகன், மன்மதன், பேரரசு, வில்லு’ போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.
நேற்று (பிப்ரவரி 5-ஆம் தேதி) நடிகரும், இயக்குநருமான டி.பி.கஜேந்திரன் உடல் நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்று தகவல் கிடைத்துள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.