நடிகர் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான படம் காதல் கொண்டேன் . சோனியா அகர்வால் இந்த படத்தில் நாயகியாக நடித்து இருந்தார் . யுவன் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் .
காதல் கொண்டேன் படத்தின் படப்பிடிப்பின் போது செல்வராகவன் ரொம்ப பொறுமையாக தனுஷுக்கு நடிப்பு சொல்லி கொடுத்துளளார் ஆனால் தனுஷ் மறுபடியும் நிறைய டேக் எடுத்துக்கொண்டே இருந்துள்ளார். இதனை தாங்கி கொள்ள முடியாமல் .அனைவரது முன்னிலையிலும் தனுஷுன் கன்னத்தில் பளார் என ஒரு அறைவிட்டார்.
உடனே தனுஷ் அழுதுகொண்டே அறைக்குள் போய் உள்ளார் . பிறகு செல்வராகவன் உடைய உதவியாளர்கள் தனுஷை சமாதானம் செய்து மீண்டும் அழைத்து வந்துள்ளனர் . இந்த தகவலை இயக்குனர் மித்ரன் ஜவகர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். இயக்குநர் மித்ரன் ஜவஹர் செல்வராகவனின் உதவி இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது ..