பிகினி உடை அணிந்து அருவியில் ஹேப்பியாக குளிக்கும் அமலா பால்… வைரலாகும் வீடியோ!
February 25, 2023 / 10:48 AM IST
|Follow Us
சினிமாவில் பாப்புலர் நடிகையாக வலம் வருபவர் அமலா பால். இவர் நடிப்பில் ‘கடாவர்’ (தமிழ்), ‘ஆடு ஜீவிதம்’ (மலையாளம்), ‘அதோ அந்த பறவை போல’ (தமிழ்), ‘கிறிஸ்டோபர்’ (மலையாளம்) என நான்கு படங்கள் லைன் அப்பில் இருந்தது.
இதில் ‘கடாவர்’ என்ற படம் கடந்த ஆண்டு (2022) ஆகஸ்ட் மாதம் பிரபல OTT தளமான ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’யில் ரிலீஸானது. இதனை இயக்குநர் அனூப்.எஸ்.பணிக்கர் இயக்கியிருந்தார்.
இதில் மிக முக்கிய ரோல்களில் ஹரிஷ் உத்தமன், முனிஷ்காந்த், அதுல்யா ரவி, ரித்விகா, வேலு பிரபாகரன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது, அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அருவியில் ஹேப்பியாக குளிக்கும் புது வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த ஹாட்டான வீடியோ இளசுகளை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.