பாலிவுட் சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சுஷ்மிதா சென். இவர் தமிழில் 1997-ஆம் ஆண்டு வெளியான ‘ரட்சகன்’ படத்தில் நடித்திருந்தார்.
இதில் ஹீரோவாக நாகார்ஜுனா நடிக்க, இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பிரவீன் காந்தி இயக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் – ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் கூட்டணியில் வெளியான ‘முதல்வன்’ படத்தில் இடம்பெற்ற ‘ஷக்கலக்க பேபி’ என்ற பாடலில் சுஷ்மிதா சென் சூப்பராக நடனமாடி அசத்தியிருந்தார்.
தற்போது, நடிகை சுஷ்மிதா சென் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “இரண்டு நாட்களுக்கு முன்பு எனக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எனக்கு ஆஞ்சியோபிலாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டதுடன், இதயத்தில் ஸ்டென்ட் வைக்கப்பட்டிருக்கிறது. இப்போது நலமாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.