தெலுங்கு சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நரேஷ் பாபு (வயது 60). இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
நரேஷ் பாபு தெலுங்கில் பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இவரும் பிரபல கன்னட நடிகை பவித்ரா லோகேஷும் (வயது 44) காதலித்து வந்ததுடன், இருவரும் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தனர். பவித்ரா லோகேஷ் தமிழில் ‘கௌரவம், அயோக்யா, கூகுள் குட்டப்பா, வீட்ல விசேஷம்’ போன்ற படங்களில் நடித்திருந்தார்.
தற்போது, நரேஷ் பாபுவும் – பவித்ரா லோகேஷும் இன்று திருமணம் செய்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. இவர்களின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. நரேஷ் பாபுவுக்கு இது 4-வது திருமணமாம், பவித்ராவுக்கு இது 2-வது திருமணமாம்.
Seeking your blessings for a life time of peace & joy in this new journey of us
ఒక పవిత్ర బంధం
రెండు మనసులు
మూడు ముళ్ళు
ఏడు అడుగులుమీ ఆశీస్సులు కోరుకుంటూ ఇట్లు
– మీ #PavitraNaresh ❤️ pic.twitter.com/f26dgXXl6g— H.E Dr Naresh VK actor (@ItsActorNaresh) March 10, 2023