விஜய் டிவியில் ஒளிபரப்பான பாப்புலர் நிகழ்ச்சியான ‘கலக்கப்போவது யாரு’-ன் முதல் டைட்டில் வின்னராகி மாஸ் காட்டியவர் கோவை குணா. இதனைத் தொடர்ந்து இவர் சன் டிவியில் ஒளிபரப்பான ‘அசத்தப்போவது யாரு’ நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
கோவை குணா பிரபல நடிகர்களான சிவாஜி, ராதாரவி, கவுண்டமணி, ஜனகராஜ் ஆகியோரைப் போல் மிமிக்ரி செய்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இவர் ‘சென்னைக் காதல்’ என்ற படத்தில் காமெடியனாக வலம் வந்தார்.
பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான விக்ரமன் இயக்கியிருந்த இந்த படத்தில் ஹீரோவாக பரத் நடித்திருந்தார். நேற்று (மார்ச் 21-ஆம் தேதி) மிமிக்ரி கலைஞரும், நடிகருமான கோவை குணா உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார். இதுவரை யாரும் பார்த்திராத கோவை குணாவின் அரிய புகைப்படத் தொகுப்பு இதோ..