சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்தவர் சமீரா ரெட்டி. இவருக்கு தமிழ் மொழியில் அமைந்த முதல் படமே மெகா ஹிட்டானது. அது தான் ‘வாரணம் ஆயிரம்’. டாப் ஹீரோக்களில் ஒருவரான சூர்யா நடித்திருந்த இந்த படத்தை இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருந்தார்.
‘வாரணம் ஆயிரம்’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகை சமீரா ரெட்டிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘அசல், நடுநிசி நாய்கள், வெடி, வேட்டை’ என தமிழ் படங்கள் குவிந்தது.
சமீரா ரெட்டி தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம், பெங்காலி ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.
2014-யில் நடிகை சமீரா ரெட்டிக்கு திருமணம் நடைபெற்றது. இவரது கணவர் பெயர் அக்ஷய் வர்தே. சமீரா ரெட்டி, அக்ஷய் வர்தே தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, சமீரா ரெட்டியின் சிறு வயதில் எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த ஸ்டில்ஸை பார்த்த ரசிகர்கள் நம்ம சமீராவா இது? என ஆச்சர்யப்படுகின்றனர்.