தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘வாரிசு’-வை வம்சி இயக்கியிருந்தார். இந்த ஆண்டு (2023) ஜனவரி 11-ஆம் தேதி இப்படம் ரிலீஸானது.
‘வாரிசு’-வை தொடர்ந்து விஜய்-யின் 67-வது படமான ‘லியோ’வை ‘மாஸ்டர்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தை ‘7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ லலித் குமார் தயாரிக்கிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகர் விஜய்-க்கு டோலிவுட்டில் பிரபல இயக்குநர்களில் ஒருவரான கோபிசந்த் மலினேனி ஒரு கதை சொல்லியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த கதை விஜய்-க்கு மிகவும் பிடித்து விட்டதாம். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகவிருக்கும் இந்த படத்தை ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம்.