சினிமாவில் மாஸ் காட்டி வரும் ஒவ்வொரு ஹீரோ, ஹீரோயினுக்கும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தன் ரசிகர்களுக்காக தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து ஹீரோஸ் & ஹீரோயின்ஸ் நடித்து வருகிறார்கள். இந்த வாரம் திரையரங்குகளில் ரிலீஸாகப்போகும் படங்களின் லிஸ்ட் இதோ…
1.கஸ்டடி :
சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நாகசைத்தன்யா. இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘கஸ்டடி’. இந்த படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.
இதில் நாகசைத்தன்யாவுக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் அரவிந்த் சாமி, ப்ரியாமணி, சரத்குமார், சம்பத் ராஜ், பிரேம்ஜி அமரன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இதற்கு ‘இசைஞானி’ இளையராஜாவும், அவரது மகன் யுவன் ஷங்கர் ராஜாவும் சேர்ந்து இசையமைத்துள்ளனர். படத்தை வருகிற மே 12-ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.
2.குட் நைட் :
தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் மணிகண்டன். இவர் ஹீரோவாக நடித்துள்ள புதிய படம் ‘குட் நைட்’. இந்த படத்தை இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கியுள்ளார்.
இதில் மணிகண்டனுக்கு ஜோடியாக மீதா ரகுநாத் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ரமேஷ் திலக், பகவதி பெருமாள், பாலாஜி சக்திவேல் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இதற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார், ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்துள்ளார், பரத் விக்ரமன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். படத்தை வருகிற மே 12-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.
3.ஃபர்ஹானா :
சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தமிழில் ‘மோகன் தாஸ், துருவ நட்சத்திரம், தீயவர் குலைகள் நடுங்க, இடம் பொருள் ஏவல், ஃபர்ஹானா, தீராக் காதல்’ என 6 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் ‘ஃபர்ஹானா’ படத்தை இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் ஜித்தன் ரமேஷ், ஐஸ்வர்யா தத்தா, அனுமோல், செல்வராகவன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இதற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார், கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார், VJ சாபு ஜோசப் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். படத்தை வருகிற மே 12-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.
4.இராவண கோட்டம் :
தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஷாந்தனு பாக்யராஜ். இவர் ஹீரோவாக நடித்துள்ள புதிய படம் ‘இராவண கோட்டம்’. இந்த படத்தை இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கியுள்ளார்.
இதில் ஷாந்தனுவிற்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் பிரபு, தீபா ஷங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இதற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார், வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார், லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். படத்தை வருகிற மே 12-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.