சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தமிழில் ‘மோகன் தாஸ், துருவ நட்சத்திரம், தீயவர் குலைகள் நடுங்க, இடம் பொருள் ஏவல், ஃபர்ஹானா, தீராக் காதல்’ என 6 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் ‘ஃபர்ஹானா’ படத்தை இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் ஜித்தன் ரமேஷ், ஐஸ்வர்யா தத்தா, அனுமோல், செல்வராகவன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இதற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார், கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார், VJ சாபு ஜோசப் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். படத்தை நாளை (மே 12-ஆம் தேதி) தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ ட்விட்டரில் “அரசால் முறையாக தணிக்கைச் செய்யப்பட்டு வெளியாக உள்ள ‘ஃபர்ஹானா’ திரைப்படம் குறித்து ஒரு சிலர் உருவாக்கும் சர்ச்சைகள் வேதனையைத் தருகிறது. இத்திரைப்படம் அனைத்து ரசிகர்களுக்குமானது, மத உணர்வுகளுக்கு எதிரானது அல்ல, தவறான பார்வைக் கொண்டவர்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டு ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டு விளக்கமளித்துள்ளனர்.