விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 6 கடந்த ஆண்டு (2022) அக்டோபர் 9-ஆம் தேதி முதல் இந்த ஆண்டு (2023) ஜனவரி 22-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது.
இந்த நிகழ்ச்சியின் சீசன் 1-யில் போட்டியாளராக இருந்தவர் ஜூலி. இவர் ‘பிக் பாஸ்’-யில் கலந்து கொள்வதற்கு முன்பே ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் ஃபேமஸானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு, ‘பிக் பாஸ்’ ஜூலி ஹீரோயினாக அவதாரம் எடுத்து விட்டார். இப்போது ஜூலி நடிப்பில் ‘அம்மன் தாயி’ மற்றும் ‘Dr.S.அனிதா MBBS’ என இரண்டு தமிழ் படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இந்நிலையில், கல்யாண கோலத்தில் ஜூலி இருக்கும் ஸ்டில் மற்றும் வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முதலில் இதை பார்த்த ஜூலியின் ரசிகர்கள் ஷாக்காகி விட்டனர். பின், இது குறித்து விசாரிக்கையில் ஜூலி இப்போது நடித்து வரும் ‘தென்றல் வந்து என்னை தொடும்’ என்ற சீரியலில் தான் இதுபோன்ற காட்சி இடம்பெறுகிறதாம்.