திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான இலியானா… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
May 14, 2023 / 12:25 AM IST
|Follow Us
சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் இலியானா. இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘கேடி’. இந்த படத்துக்கு பிறகு இலியானா நடித்த இரண்டாவது தமிழ் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அது தான் ‘நண்பன்’. இந்த படத்தில் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய் நடிக்க, இதனை பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கியிருந்தார். இப்போது இலியானா கைவசம் ஒரு ஹிந்தி படம் மட்டும் இருக்கிறது.
இந்நிலையில், கடந்த மாதம் இலியானா இன்ஸ்டாகிராமில் இரண்டு புகைப்படங்களை ஷேரிட்டு தான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று அறிவித்தார். இதற்கு சிலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர், பலர் “எப்போது உங்களுக்கு திருமணம் ஆனது? குழந்தைக்கு அப்பா யார்?” என்று கேட்டனர்.
இந்த கேள்விக்கு இன்னும் பதில் அளிக்காத இலியானா தற்போது BABY BUMP புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார். சமீபத்தில், பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்பின் சகோதரர் செபாஸ்டியன் லாரன்ட் மைக்கேலும், இலியானாவும் காதலித்து வருவதாகவும், இருவரும் டேட்டிங் சென்று வருவதாகவும் தண்டோரா போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.