சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் ‘குஷி, சாகுந்தலம்’ என இரண்டு தெலுங்கு படங்களும், ‘சிட்டாடல்’ என்ற ஹிந்தி வெப் சீரிஸும் லைன் அப்பில் இருந்தது.
இதில் ‘சாகுந்தலம்’ படம் கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் 3டி-யில் ரிலீஸானது.
இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான குணசேகர் இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் அல்லு அர்ஹா, தேவ் மோகன், சச்சின் கெடேகர், கபீர் பேடி, மோகன் பாபு, பிரகாஷ் ராஜ், மதுபாலா, கௌதமி, அதிதி பாலன், அனன்யா நாகல்லா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

மணிஷர்மா இசையமைத்திருந்த இதற்கு சேகர்.வி.ஜோசப் ஒளிப்பதிவு செய்திருந்தார், பிரவின் புடி படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார். தற்போது, இந்த படத்தின் மொத்த வசூலே ரூ.9.15 கோடி தான் என்றும், தயாரிப்பாளருக்கு ரூ.14.68 கோடி நஷ்டம் என்றும் தகவல் கிடைத்துள்ளது.
