தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் சரத்பாபு. இவர் தமிழில் அறிமுகமான முதல் படம் ‘பட்டினப்பிரவேசம்’. இந்த படத்தை பிரபல இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கியிருந்தார்.
இந்த படத்துக்கு பிறகு சரத்பாபு ‘நிழல் நிஜமாகிறது, வட்டத்துக்குள் சதுரம், முள்ளும் மலரும், நினைத்தாலே இனிக்கும், உதிரிப்பூக்கள், நெஞ்சத்தைக்கிள்ளாதே, நெற்றிக்கண், பகல் நிலவு, வேலைக்காரன், அண்ணாமலை, டூயட், முத்து, லவ் பேர்ட்ஸ், ஆளவந்தான், பாபா, புதிய கீதை, ஒற்றன், அருள், கஜேந்திரா, பேரரசு’ போன்ற பல தமிழ் படங்களில் நடித்தார்.
இவர் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நடிகர் சரத்பாபு (வயது 71) நேற்று இயற்கை எய்தினார். இதுவரை யாரும் பார்த்திராத சரத்பாபுவின் அரிய புகைப்பட தொகுப்பு இதோ..