விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு?’ சீசன் 5 மூலம் ஃபேமஸானவர் தீனா. இவர் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான முதல் படம் ‘ப.பாண்டி’. இந்த படத்தை தனுஷ் இயக்கியிருந்தார்.
‘ப.பாண்டி’ படத்துக்கு பிறகு நடிகர் தீனாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘தும்பா, கைதி, 50/50, மாஸ்டர், புலிக்குத்தி பாண்டி, அன்பறிவு, விக்ரம், உடன்பால்’ என தமிழ் படங்கள் குவிந்தது.
இப்போது ‘டீசல்’ என்ற படத்தில் தீனா நடித்து வருகிறார். இந்நிலையில், இன்று (ஜூன் 1-ஆம் தேதி) தீனா கிராபிக் டிசைனர் பிரகதியை திருமணம் செய்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. இவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.