தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இப்போது இவர் நடிப்பில் ‘ஜெயிலர், லால் சலாம்’ மற்றும் இயக்குநர் த.செ.ஞானவேல் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
ரஜினியின் 169-வது படமான ‘ஜெயிலர்’-ஐ பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் இயக்குகிறார். ‘லால் சலாம்’ படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்குகிறார். இதில் விஷ்ணு விஷால் – விக்ராந்த் இணைந்து நடிக்க, ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் வலம் வரவிருக்கிறாராம். இவ்விரண்டு படங்களின் ஷூட்டிங்கும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் கேரியரில் மிகப் பெரிய வெற்றியடைந்த படம் ‘பாட்ஷா’. இதில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நக்மா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சுரேஷ் கிருஷ்ணா இதனை இயக்கியிருந்தார். இந்த படத்தில் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் ரகுவரன் மிரட்டியிருந்தார்.
மேலும், ரஜினியின் நண்பன் கதாபாத்திரத்தில் சரண்ராஜ் நடித்திருந்தார். ஆனால், இக்கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க வேண்டுமென சுரேஷ் கிருஷ்ணா முதலில் முன்னணி மலையாள நடிகர் மம்மூட்டியை தான் அணுகினாராம். பின், சில காரணங்களால் மம்மூட்டியால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.