“எனக்கொரு பொறுப்புணர்ச்சி வந்த மாதிரி நான் ஃபீல் பண்றேன்”… கல்வி விருது வழங்கும் விழாவில் பேசிய விஜய்!
June 17, 2023 / 05:10 PM IST
|Follow Us
இந்த மாதிரி ஒரு ஃபங்க்ஷனை ஏற்பாடு பண்றதுக்கு ரொம்ப ரொம்ப முக்கிய காரணம். சமீபத்துல ஒரு படத்துல அழகான வசனம் பார்த்தேன் ‘காடு இருந்தா எடுத்துக்குவானுங்க, ரூபா இருந்தா புடிங்கிடுவானுங்க, ஆனா படிப்ப மட்டும் உன்கிட்ட இருந்து எடுத்துக்கவே முடியாது’ன்னு. அது ரொம்ப என்ன பாதிச்ச வசனமா இருந்தது. இது 100/100 உண்மை மட்டும் இல்ல, இது தான் எதார்த்தமும் கூட. அப்படி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த இந்த கல்விக்கு வந்து என் SIDE-ல இருந்து ஏதாவது செய்யணும்னு ரொம்ப நாளாவே MIND-ல ஓடிட்டே இருந்துச்சு. அதுக்கான நேரம் தான் இதுன்னு நான் நினைக்கிறேன்.
நம்ம படிக்கணும், EXAMS இருக்கு, MARKS, GRADES இதெல்லாமே முக்கியம் தான். BUT, அதை தாண்டி உங்களுடைய கேரக்டருக்கும், சிந்திக்கும் திறனுக்கும் நீங்க முக்கியத்துவம் கொடுத்தா தான் அது வந்து ஒரு முழுமையான கல்வியாவே ஒன்னு ஆகுது. SEE FOR EXAMPLE. இந்த கேரக்டரை பத்தி அழகான LINES இருக்கு ‘WHEN WEALTH IS LOST, NOTHING IS LOST. WHEN HEALTH IS LOST, SOMETHING IS LOST. WHEN CHARACTER IS LOST, EVERYTHING IS LOST”. இதை நான் ஏன் சொல்றேன்னா, முதல்முறையா உங்க PARENTS-ஓட கண்காணிப்புல இருந்து நீங்க வேற ஒரு LIFE-க்கு போறீங்க. அங்க ஒரு சுதந்திரம் ஒன்னு கிடைக்கும். அதை PROPER-ஆ ஒரு SELF DISCIPLINE-ஓட HANDLE பண்ணிக்கோங்க.
அப்புறம் உங்க பாடப் புத்தகங்களை தாண்டி நீங்க படிக்கணும். எல்லாரையும் பத்தி தெரிஞ்சுக்கோங்க. எல்லா தலைவர்களை பத்தியும் தெரிஞ்சுக்கோங்க. அம்பேத்கர் அவர்களை பற்றி தெரிஞ்சுக்கோங்க. பெரியார் அவர்களை பற்றி தெரிஞ்சுக்கோங்க. காமராஜர் அவர்களை பற்றி தெரிஞ்சுக்கோங்க. நல்ல நல்ல விஷயத்தை எடுத்துக்கோங்க, மத்தத விட்ருங்க. இது தான் வந்து இன்னைக்கு உங்க TAKE HOME MESSAGE. AND நீங்க தான் நாளைய வாக்காளர்கள். அடுத்தடுத்து புதிய நல்ல நல்ல தலைவர்களை நீங்க தான் தேர்ந்தெடுக்க போறீங்க. தமிழ்நாடு முழுக்க இருக்க ஒவ்வொரு மாணவ, மாணவியரும் அவங்க அவங்க PARENTS-கிட்ட போய் அப்பா, அம்மா இனிமே காசு வாங்கிட்டு ஓட்டு போடாதீங்கன்னு சொல்லுங்க. இந்த தேர்வுல வெற்றியடைஞ்ச உங்க எல்லாருக்குமே என்னுடைய வாழ்த்துக்கள், தோல்வியடைஞ்சவங்க சீக்கிரமாவே வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்” என்று கூறினார்.
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus