கமல்ஹாசனின் ’16 வயதினிலே’ படத்துக்காக ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் இவ்ளோதானா?
July 7, 2023 / 11:54 AM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இப்போது இவர் நடிப்பில் ‘ஜெயிலர், லால் சலாம்’ மற்றும் இயக்குநர் த.செ.ஞானவேல் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
ரஜினியின் 169-வது படமான ‘ஜெயிலர்’-ஐ பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் இயக்குகிறார். இதன் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. படம் வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
‘லால் சலாம்’ படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்குகிறார். இதில் விஷ்ணு விஷால் – விக்ராந்த் இணைந்து நடிக்க, ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் வலம் வரவிருக்கிறாராம். இப்படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ரஜினியின் கேரியரில் மிக முக்கியமான படம் ’16 வயதினிலே’.
இதில் ஹீரோவாக ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ஸ்ரீதேவி நடித்திருந்தார். இதனை பிரபல இயக்குநர் பாரதிராஜா இயக்கியிருந்தார். ரஜினி நெகட்டிவ் ரோலில் நடித்திருந்த இப்படம் சூப்பர் ஹிட்டானது. இந்த படத்தில் நடிக்க முதலில் ரஜினிக்கு ரூ.3000 சம்பளமாக பேசப்பட்டு, பின் ரூ.2500 மட்டுமே கொடுக்கப்பட்டதாம்.
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus