‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’வில் படு கவர்ச்சியாக நடிப்பதற்காக தமன்னா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?
July 10, 2023 / 01:58 AM IST
|Follow Us
சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் தமன்னா. தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே நெகட்டிவ் ஷேடில் நடித்திருந்தார் தமன்னா. அந்த படம் தான் ‘கேடி’. ‘கேடி’-க்கு பிறகு கதையின் நாயகியாக நடித்த ‘கல்லூரி’ திரைப்படம் மிகப் பெரிய ஹிட்டாகி தமன்னாவுக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது.
அதன் பிறகு தமன்னாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தமிழ் படங்கள் குவிந்தது. இவர் தமிழ் மொழியில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மராத்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.
தமன்னா நடிப்பில் தமிழில் ‘ஜெயிலர்’, தெலுங்கில் ‘தட் இஸ் மகாலக்ஷ்மி, போலா ஷங்கர்’, ஹிந்தியில் ‘போலே சுடியான், லஸ்ட் ஸ்டோரீஸ் 2’, மலையாளத்தில் ‘பந்த்ரா’ என 6 படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’ கடந்த ஜூன் 29-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘நெட்ஃப்ளிக்ஸ்’-ல் ரிலீஸானது.
ஆந்தாலஜி படமான இதில் தமன்னா, அவரது காதலரும், நடிகருமான விஜய் வர்மாவுடன் சேர்ந்து படு கவர்ச்சியாக நடித்திருந்தார். தற்போது, இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகை தமன்னா ரூ.7 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus