ஐஸ்வர்யா ராய்-க்கு பதிலாக நடித்த சிம்ரன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?
July 20, 2023 / 03:56 PM IST
|Follow Us
சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராய். இவருக்கு அமைந்த முதல் தமிழ் படமே டாப் இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கத்தில் தான் அமைந்தது. அந்த படம் தான் ‘இருவர்’. இதில் மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ மோகன் லால் தான் கதையின் நாயகனாக நடித்திருந்தார்.
‘இருவர்’ படத்துக்கு பிறகு நடிகை ஐஸ்வர்யா ராய்-க்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன், பொன்னியின் செல்வன் 1 & 2’ என தமிழ் படங்கள் குவிந்தது. ஐஸ்வர்யா ராய் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் ஹிந்தி, ஆங்கிலம், பெங்காலி, தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.
தற்போது, ஐஸ்வர்யா ராய் நடிக்காமல் மிஸ் பண்ண ஒரு சூப்பர் ஹிட் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. 1999-ல் ரிலீஸான தமிழ் படம் ‘ஜோடி’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ப்ரவின்காந்த் இயக்க, ஹீரோவாக ‘டாப் ஸ்டார்’ பிரஷாந்த் நடித்திருந்தார்.
இதில் பிரஷாந்துக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். முதலில் சிம்ரன் ரோலில் நடிக்க வைக்க வேண்டுமென இயக்குநர் ப்ரவின்காந்த் ஐஸ்வர்யா ராயை அணுகியிருந்தாராம். பின், சில காரணங்களால் ஐஸ்வர்யாவால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus