சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கௌரி கிஷன். தமிழ் மொழியில் இவருக்கு அமைந்த முதல் படத்துக்கே மிகப் பெரிய வரவேற்பு கிடைத்து சூப்பர் ஹிட்டானது. அது தான் ’96’. இந்த படத்தில் சிறு வயது த்ரிஷாவாக வந்து ரசிகர்களை லைக்ஸ் போட வைத்தார் கௌரி கிஷன்.
’96’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகை கௌரி கிஷனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் மலையாள மொழியில் ‘மர்கம்கலி, அனுகிரகீதன் ஆண்டனி’, தெலுங்கு மொழியில் ‘ஜானு’, தமிழ் மொழியில் ‘மாஸ்டர், கர்ணன்’ என படங்கள் குவிந்தது.
இதில் ‘மாஸ்டர்’ மற்றும் ‘கர்ணன்’ ஆகிய இரண்டு படங்களுமே மெகா ஹிட்டானது. இப்போது கௌரி கிஷன் நடிப்பில் இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அங்கு எடுத்த ஹாட்டான ஸ்டில்ஸ் வெளியாகி வைரலாகி வருகிறது.