தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘வாரிசு’-வை வம்சி இயக்கியிருந்தார். இந்த ஆண்டு (2023) ஜனவரி 11-ஆம் தேதி இப்படம் ரிலீஸானது.
‘வாரிசு’-வை தொடர்ந்து விஜய்-யின் 67-வது படமான ‘லியோ’வை ‘மாஸ்டர்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படம் வருகிற அக்டோபர் 19-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான வெங்கட் பிரபு இயக்கவுள்ளார்.
‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இதற்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், வெங்கட் பிரபுவின் புதிய படம் குறித்த அப்டேட் ஒன்று நேற்று வெளியாகும் என்று சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
உடனே, ரசிகர்கள் அனைவரும் ‘விஜய் 68’ அப்டேட் என்று நினைத்து விட்டு ஆவலுடன் காத்திருந்தார்கள். ஆனால், அந்த அப்டேட் வெங்கட் பிரபு தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் வாங்கி ரிலீஸ் செய்யும் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ படம் பற்றியது. பின், ரசிகர் ஒருவர் விஜய் படம் குறித்த அப்டேட்டை வெங்கட் பிரபுவிடம் கேட்க, அதற்கு வெங்கட் பிரபு “தளபதி 68-ன் அடுத்த அப்டேட் சும்மா தெறிக்கும்!! காத்திருங்கள்” என்று ட்வீட் போட்டுள்ளார்.