சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் சிலம்பரசன் TR. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘பத்து தல’. இந்த படத்தை இயக்குநர் கிருஷ்ணா இயக்கியிருந்தார். இப்படம் சிலம்பரசன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
சிலம்பரசனின் 48-வது படத்தை ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளாராம். இதனை நடிகர் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் தனது ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பில் தயாரிக்கவுள்ளாராம்.
இதன் பட்ஜெட் ரூ.100 கோடியாம். இதற்கான ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. ஷூட்டிங்கை வருகிற அக்டோபர் மாதத்தில் இருந்து ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று இயக்குநர் தேசிங்கு பெரியசாமியின் பிறந்தநாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தற்போது, இவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட ஸ்டில் வெளியாகியுள்ளது.