இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு அறுவை சிகிச்சை… அப்பாவை நேரில் சந்தித்த விஜய்!
September 15, 2023 / 10:42 AM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘வாரிசு’-வை வம்சி இயக்கியிருந்தார். இந்த ஆண்டு (2023) ஜனவரி 11-ஆம் தேதி இப்படம் ரிலீஸானது.
‘வாரிசு’-வை தொடர்ந்து விஜய்-யின் 67-வது படமான ‘லியோ’வை ‘மாஸ்டர்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தை ‘7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ லலித் குமார் தயாரிக்கிறார். படம் வருகிற அக்டோபர் 19-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
இதனைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். ‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இதில் விஜய் டபுள் ஆக்ஷனில் வலம் வரப்போகிறார், ஹீரோயினாக பிரியங்கா மோகன் நடிக்கவிருக்கிறார்.
இதன் ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடக்கிறதாம். ஷூட்டிங்கை வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி முதல் ஆரம்பிக்கவுள்ளனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்து கொண்ட தனது அப்பாவும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரையும், அம்மா ஷோபாவையும் விஜய் நேரில் சந்தித்து பேசியபோது எடுத்த லேட்டஸ்ட் ஸ்டில் வெளியாகியுள்ளது. இந்த ஸ்டில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.