‘SK23’-ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… அதிகாரப்பூர்வமாக அறிவித்த சிவகார்த்திகேயன்!
September 25, 2023 / 01:44 PM IST
|Follow Us
சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் ஏ.ஆர்.முருகதாஸ். முதல் படத்திலேயே முன்னணி நடிகரை இயக்கும் வாய்ப்பு எல்லாருக்கும் கிடைத்து விடாது. ஆனால், ஏ.ஆர்.முருகதாஸுக்கு அமைந்தது. அந்த படம் தான் ‘தல’ அஜித் ஹீரோவாக நடித்த ‘தீனா’.
‘தீனா’வின் சக்சஸ், ஏ.ஆர்.முருகதாஸுக்கு ‘புரட்சிக் கலைஞர்’ விஜயகாந்தை வைத்து ‘ரமணா’ என்ற படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கியது. ‘ரமணா’வும் சூப்பர் ஹிட்டாக தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குநரின் லிஸ்டில் இடம் பிடித்தார் ஏ.ஆர்.முருகதாஸ்.
இதன் பிறகு சூர்யாவுடன் ‘கஜினி, 7ஆம் அறிவு’, அமீர் கானுடன் ‘கஜினி’ (ஹிந்தி), ‘தளபதி’ விஜய்யுடன் ‘துப்பாக்கி, கத்தி, சர்கார்’, ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ் பாபுவுடன் ‘ஸ்பைடர்’, ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துடன் ‘தர்பார்’ என அடுத்தடுத்து டாப் ஹீரோக்களுடன் கைகோர்த்து மாஸ் காட்டினார் ஏ.ஆர்.முருகதாஸ்.
இந்நிலையில், இன்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் பிறந்தநாளை முன்னிட்டு முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்ததுடன், அவருடைய அடுத்த படத்தில் தான் நடிக்கப்போவதாகவும் அறிவித்துள்ளார். இப்படம் சிவகார்த்திகேயனின் கேரியரில் 23-வது படமாம். இதற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.
Sir I’m extremely delighted to join with you for my 23rd film and I'm double delighted after listening to your narration. This film is going to be very special for me in all aspects and I can’t wait to start… pic.twitter.com/XiOye1GmuL
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.