‘தலைவர் 170’-ஐ இயக்கும் த.செ.ஞானவேல்… இதில் நடிக்க ஒப்பந்தமான மூன்று ஹீரோயின்ஸ்!
October 3, 2023 / 12:11 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இப்போது இவர் நடிப்பில் ‘லால் சலாம்’, இயக்குநர் த.செ.ஞானவேல் படம், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கவுள்ள ‘தலைவர் 170’ படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறார். இதனை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கவுள்ளார்.
ரஜினி போலீஸ் ரோலில் நடிக்கவிருக்கும் இந்த படத்துக்கு ‘வேட்டையன்’ என டைட்டில் வைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடந்து கொண்டிருக்கிறது.
ஷூட்டிங்கை இந்த வாரத்திலிருந்து ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளனராம். தற்போது, இதில் மிக முக்கிய ரோல்களில் நடிகைகள் மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் ஆகியோர் நடிக்கவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.