அதர்வா – மணிகண்டன் இணைந்து நடித்துள்ள ‘மத்தகம்’ பார்ட் 2 எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!
October 12, 2023 / 05:32 PM IST
|Follow Us
சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் அதர்வா. இவர் நடிப்பில் ‘நிறங்கள் மூன்று, அட்ரஸ், தணல்’ என மூன்று படங்களும், ‘மத்தகம்’ என்ற வெப் சீரிஸும் லைன் அப்பில் இருந்தது.
இதில் ‘மத்தகம்’ வெப் சீரிஸின் பார்ட் 1 இந்த ஆண்டு (2023) ஆகஸ்ட் 18-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’ல் வெளியானது. இதன் பார்ட் 2 இன்று (அக்டோபர் 12-ஆம் தேதி) வெளியாகியுள்ளது. இந்த சீரிஸை ‘கிடாரி’ புகழ் இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கியுள்ளார்.
இதில் அதர்வாவுக்கு எதிராக மோதும் வில்லன் ரோலில் ‘குட் நைட்’ புகழ் மணிகண்டன் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் நிகிலா விமல், கெளதம் மேனன், திவ்யதர்ஷினி, இளவரசு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தற்போது, இவ்வெப் சீரிஸை ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பார்த்த ரசிகர்கள், சீரிஸ் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
Releasing just 2 episodes is insulting the viewers. Don't be a joke guys. Who will release a supposed to be thriller series in parts and fizz out the thrill. Very cheap.#Mathagam