சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் ‘ஜப்பான்’, ‘சர்தார் 2’, ‘கைதி 2’ மற்றும் இயக்குநர் நலன் குமரசாமி படம், இயக்குநர் பிரேம் குமார் படம் என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் ‘ஜப்பான்’ படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ராஜு முருகன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் சுனில், விஜய் மில்டன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படம் கார்த்தியின் கேரியரில் 25-வது படமாம். இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார், ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதனை ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று இப்படத்தின் டீசரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. படத்தை வருகிற தீபாவளிக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.